திருவண்ணாமலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 31 பவுன் நகை கொள்ளை


திருவண்ணாமலையில் பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 31 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 18 Oct 2021 11:50 PM IST (Updated: 18 Oct 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 31 பவுன் நகை கொள்ளை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை எம்.ஆர்.டி. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 39). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று பகல் சுமார் 12 மணியளவில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நூக்காம்பாடி அருகில் உள்ள ராந்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார். 

பின்னர் அவர்கள் மதியம் 3 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பிரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 31 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
 இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story