புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெண் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெண் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 12:54 AM IST (Updated: 19 Oct 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக தனிப்படை போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே நெடுங்கரைப்பட்டியில் உள்ள ஒரு டீக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட ரூ.1லட்சம் மதிப்புடைய புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக நெடுங்கரைப்பட்டியை சேர்ந்த கனகராஜ் மனைவி மகேஸ்வரி (வயது 40) என்பவரை கைது செய்து பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story