ராஜபாளையத்தில் புதிய நூலகம்


ராஜபாளையத்தில் புதிய நூலகம்
x
தினத்தந்தி 19 Oct 2021 1:00 AM IST (Updated: 19 Oct 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் புதிய நூலகத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் புதிய நூலகத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர். 
திறப்பு விழா 
ராஜபாளையம் சக்கராஜாக்கோட்டை ஊர்ப்புற நூலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு  கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். 
 விழாவில் வாசகர் வட்டத்தலைவி மஞ்சு ரெங்கநாதன் வரவேற்றார். தென்காசி எம்.பி. தனுஷ் குமார், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
 அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், 
மக்களின் மனதில் புரட்சி, ஊக்கம், முயற்சி, வலிமை உள்ளிட்ட பல்வேறு நற்குணங்களை ஏற்படுத்துவது நூலகம் தான். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் உள்ளது. அதற்கு வித்திட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். அவரால் ஏற்படுத்தப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தான் நூலகமாக அனைத்து ஊராட்சிகளிலும் செயல்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார். 
தலைமுறை 
தொடர்ந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:- 
 பெண்களின் சக்தியை வெளிக்கொண்டு வந்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தான். அதேபோல் பெண்களின் மேல் மரியாதையும் அவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்படுவது தற்போது உள்ள  தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். பெண்களுக்கு சுயமரியாதையை ஏற்படுத்துவது படிப்பறிவு மட்டுமே. ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால் அந்த தலைமுறையே படிப்பறிவு பெறும்.
 இவ்வாறு அவர் கூறினார். 
விழாவில் ஒன்றியகுழு தலைவர், மாவட்டகவுன்சிலர், நகரசெயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாநில பொதுக்குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


Next Story