சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி


சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Oct 2021 1:02 AM IST (Updated: 19 Oct 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் தாய் கண் முன் சரக்கு வாகனம் ேமாதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சிவகாசி, 
சிவகாசியில் தாய் கண் முன்  சரக்கு வாகனம்  ேமாதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 
ஓட்டல் 
சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் முருகராஜ். இவருைடய மனைவி விமலாரோஸ். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள். இந்தநிலையில் இளையமகன் நாகராஜ் (வயது 22) சிவகாசியில் ஓட்டல் நடத்தி வந்தார். அவருடன் விமலாரோஸ் உதவியாக இருந்து வந்துள்ளார். 
சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்து விட்டு தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் வீடு திரும்பி உள்ளனர். அப்ேபாது பாரைப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. 
வாலிபர் பலி 
இதில் தாயும், மகனும் பலத்த காயத்துடன் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாகராஜ் பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story