போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2021 1:44 AM IST (Updated: 19 Oct 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்:
போலீசாரை கண்டித்து பெரம்பலூர் நகர குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே போலீஸ் உதவி மையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் சிவானந்தம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் நகர் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களுக்கு புகார் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யாதது, ஏற்கனவே திருட்டு சம்பவங்களுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்காததது ஆகியவற்றுக்காக போலீசாரை கண்டித்தும், புகார் அளிப்பவரிடம் லஞ்சம் வாங்கும் போலீசாரை கண்டித்தும், திருட்டு போன நகை, பணம், பொருட்களை போலீசார் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story