கம்பத்தில் தீப்பிடித்ததில் மின்கம்பிகள் அறுந்து தரைக்கடைகள் மீது விழுந்தது


கம்பத்தில் தீப்பிடித்ததில் மின்கம்பிகள் அறுந்து தரைக்கடைகள் மீது விழுந்தது
x
தினத்தந்தி 19 Oct 2021 1:46 AM IST (Updated: 19 Oct 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் தீப்பிடித்ததில் மின்கம்பிகள் அறுந்து தரைக்கடைகள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்:
அரியலூர் நகரில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அரியலூர் நகரில் உள்ள ஒரு பகுதி கூத்தூர் துணை மின் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வினியோகம் செய்யப்படும் மின்சாரம், குறைந்த அளவே கொடுப்பதால் நகரின் வடக்குப் பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த பகுதியில் அரசு மருத்துவமனை, ெரயில் நிலையம், வங்கிகள் ஆகியவை உள்ளன. கூத்தூர் கிராம பகுதி என்பதால் எப்போது மின்சாரம் வரும், எப்போது தடைபடும் என்பது தெரிவதில்லை. நகரில் பல தெருக்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. நேற்று மாலை 6 மணியளவில் மார்க்கெட் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வாசலில் உள்ள மின் கம்பத்தில் திடீரென்று தீப்பிடித்து கம்பிகள் அறுந்து தரை கடைகள் மீது விழுந்தது. அப்போது மின்சாரம் தடைபட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் இந்த பகுதியில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

Next Story