தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 Oct 2021 8:30 PM GMT (Updated: 18 Oct 2021 8:30 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

குடிநீர் வசதி தேவை 
சேலம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் சாணாரப்பட்டி ஊராட்சியில் உள்ளது மசக்காளியூர் காலனி. இந்த பகுதி பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. அந்த குடிநீர் இணைப்பு தற்ேபாது உடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்லவேண்டி உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஊர்ெபாதுமக்கள், மசக்காளியூர் காலனி, சேலம்.
=====
தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
சேலம் சன்னியாசிகுண்டு குமரன் நகரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் வாகனங்களில் செல்பவர்களையும் அவைகள் துரத்தி கடிக்கின்றன. எனவே இங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த பகுதிமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-ராமச்சந்திரன், சன்னியாசிகுண்டு, சேலம்.
====
பயணிகள் நிழற்குடை
சேலம் ஜாகீர்ரெட்டிபட்டியில் பைபாஸ் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு கல்லூரி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமான பயணிகள் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இங்கு பயணிகள் நிழற்குடையோ, இருக்கைகளோ இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனார். எனவே பயணிகளின் நலன் கருதி இங்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும். 
-வெங்கடேசன், ஜாகீர் ரெட்டிபட்டி, சேலம்.
===
தார் சாலை வசதி
தர்மபுரி மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கோம்பேரி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மண் சாலையால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து  வருகின்றனர். கோம்பேரியில் இருந்து 1½ கி.மீ. தூரம் சென்று பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பொருட்களை வாங்க செல்கின்றனர்.  இரவு நேரங்களில் இந்த வழியாக அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்த கிராமத்துக்கு தார் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஹரிகரன் மாதேஷ், கோம்பேரி, தர்மபுரி.

சுகாதார சீர்கேடு
சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் அந்த பகுதியில் உள்ளவர்கள் அங்கு குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். மேலும் குப்பைகள் நிரம்பி வழிந்து வெளியில் சிதறி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த அலுவலகத்திற்கு கல்வி அதிகாரிகள் பலர் வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும். 
-ஊர்பொதுமக்கள், அயோத்தியாப்பட்டணம், சேலம்.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே பள்ளிவாசல் பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. மேலும் குப்பைகளை தெருநாய்கள், குதிரைகள் கிளறிவிடுவதால் சாலையில் குப்பைகள் பரவி கிடக்கிறது. மேலும் அந்த வழியாக செல்பவர்களையும் தெருநாய்கள் கடிக்க துரத்துகின்றன.  அதிகாரிகள் இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், ஜாகீர் அம்மாபாளையம், சேலம். 
======
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?
தர்மபுரி பென்னாகரம் மெயின் ரோடு குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் முதல் 4 வழிச்சாலை மேம்பாலம் வரை இரவு நேரங்களில் தெரு விளக்குகள் இல்லாததால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் இல்லாததால் பாதசாரிகள் திடீரென சாலையை கடக்கின்றனர். இதனாலும் விபத்து ஏற்படுகிறது..எனவே இந்த சாலையில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

கிருஷ்ணகிரி களர்பதி ஊராட்சியில் சமத்துவபுரத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. ஆனால் இங்கு தெருவிளக்கு வசதி இல்லாததால், அந்த பகுதி இருளில் மூழ்கி காணப்படுகிறது. மேலும் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்களும் நடமாடுகிறது. ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பாக இங்கு உயர் கோபுர மின்விளக்கு அல்லது தெருவிளக்கு அமைக்க ேவண்டும்.
-த.சிவன் சமத்துவபுரம்,கிருஷ்ணகிரி.
=====
பகலிலும் எரியும் தெருவிளக்கு
தர்மபுரி காந்தி நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள தெரு விளக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு, பகல் பாராமல் எரிகிறது. இது தொடர்பாக நகராட்சி அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பகலிலும் எரியும் இந்த தெருவிளக்கை முறையாக பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தங்கதுரை, காந்திநகர்.

Next Story