காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை சாவு


காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை சாவு
x
தினத்தந்தி 19 Oct 2021 2:21 AM IST (Updated: 19 Oct 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை பரிதாபமாக இறந்தது.

திருவட்டார், 
பேச்சிப்பாறையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை பரிதாபமாக இறந்தது.
காட்டாற்று வெள்ளம்
குமரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோதையார், மோதிரமலை, குற்றியார் உளிட்ட 15 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. 
மேலும், குற்றியார் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ெவள்ளத்தில் சிக்கிய விலங்கு 
இந்த நிலையில் அப்பர் கோதையார் பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
அப்போது, காட்டாற்று வெள்ளத்தில் பெரிய விலங்கு ஒன்று அடித்து செல்லப்படுவதை பேச்சிப்பாறை வனத்துறையினர் கண்டனர். இதையடுத்து அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வனவிலங்கை தேடி வந்தனர். 
குட்டி யானை சாவு
இந்தநிலையில் நேற்று காலையில் பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கோதைமடக்கு பகுதியில் இறந்த நிலையில் ஒரு குட்டியாைன கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். உடனே, இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் இறந்த நிலையில் கிடந்த குட்டியாைனயை பார்வையிட்டனர். 
அப்போது, வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது 6 மாத குட்டியானை என்பது தெரியவந்தது. தொடர்ந்து பேச்சிப்பாறை சீரோ பாயின்ட் அருகில் உள்ள வன அலுவலகம் அருகே உள்ள உள்ள இடத்துக்கு ெகாண்டு வரப்பட்ட குட்டி யானையின் உடலை, மாவட்ட வன அதிகாரி இளையராஜா முன்னிலையில் களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலய மருத்துவக் குழுவினர் டாக்டர் முருகன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அருகிலேயே குட்டி யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story