தனியார் நிறுவனத்தில் திருடிய வாலிபர் கைது


தனியார் நிறுவனத்தில் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 3:31 AM IST (Updated: 19 Oct 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் தனியார் நிறுவனத்தில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணம் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். 

மேலும் குற்றவாளிகளை பிடிக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் நேரடி மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த சுதாகர் (வயது 20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2¾ லட்சம் மற்றும் சில பொருட்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் விவரங்கள் மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட பொருட்கள், நகைகள் பற்றிய விவரம் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 

Next Story