கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றகோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றகோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நீர்நிலை மற்றும் ஓடை கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தடபெரும்பக்கம் ஊராட்சியில் மழை நீர் கால்வாய் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு திருவெற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலை பகுதியில் செல்கிறது. இந்த ஓடை கால்வாயை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் நிலையில், மழைக்காலங்களில் வெள்ள நீர் வெளியேற முடியாமல் குடியிருப்புகளில் புகும் நிலை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நீர்நிலை மற்றும் ஓடை கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பின்னர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்த போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story