கத்திமுனையில் வழிப்பறி செய்த 8 பேர் கைது


கத்திமுனையில் வழிப்பறி செய்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 2:52 AM GMT (Updated: 19 Oct 2021 2:52 AM GMT)

செங்குன்றம் பகுதியில் கத்திமுனையில் வழிப்பறி செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி,

கோவில்பட்டி காமநாயக்கன்பட்டி கிராமத்தை சார்ந்தவர் அந்தோணிசாமி (வயது 22). இவர் செங்குன்றம் பகுதியில் தங்கி பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே கும்மனூர் வழியாக செல்லும் வண்டலூர்-சென்னை வெளிவட்ட சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு மர்ம கும்பல் ஒன்று அந்தோணிசாமி நோக்கி வந்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து கொண்டனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட சோழவரம் போலீசார் 8 பேர் கொண்ட மர்ம கும்பலை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அப்துல்கபீர் (19), பெப்சி மணி (23), அலெக்ஸ் (24) உள்ளிட்ட 8 பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் 8 பேரையும் கைது செய்து, பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story