காகத்துக்கு சோறு வைக்க சென்றபோது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி


காகத்துக்கு சோறு வைக்க சென்றபோது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 19 Oct 2021 9:31 AM IST (Updated: 19 Oct 2021 9:31 AM IST)
t-max-icont-min-icon

காகத்துக்கு சோறு வைக்க சென்றபோது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

பூந்தமல்லி, 

திருவேற்காடு அடுத்த மாதிராவேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உபேந்திரன். இவருடைய மனைவி லட்சுமி பிரியா (வயது 29). இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகில் உள்ள தடுப்பு சுவர் இல்லாத 2-வது மாடியில் காகத்துக்கு சோறு வைக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி பிரியாவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், லட்சுமி பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெவித்தனர். இதுபற்றி திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story