காயல்பட்டினத்தில் மீலாது விழாவை முன்னிட்டு மவுலித் மஜ்லிஸ்


காயல்பட்டினத்தில் மீலாது விழாவை முன்னிட்டு மவுலித் மஜ்லிஸ்
x
தினத்தந்தி 19 Oct 2021 3:27 PM IST (Updated: 19 Oct 2021 3:27 PM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் மீலாது விழாவை முன்னிட்டு மவுலித் மஜ்லிஸ் நடந்தது

மீலாது விழா மவுலித்மஜ்லிஸ்
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மீலாது விழா காயல்பட்டினத்தில் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி காயல்பட்டினத்தில் உள்ள புதுப்பள்ளிவாசல், காதிரிய்யா கொடிமர சிறுநயினார் பள்ளி, பெரிய குத்துப்பா பள்ளி, சிறிய குத்பா பள்ளி, இரட்டைக்குளத்துபள்ளி, அஹமது நைனா பள்ளி உள்பட 20 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் மவுலித் மஜ்லிஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு  நடைபெற்றது. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்று புகழ் பாடினர்.

Next Story