ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் சுந்தரலிங்கம் காலனியை சேர்ந்த முத்துமாடசாமி மகன் முத்துமாரியப்பன் (வயது 27). இவர் சென்னையில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்கு வந்தார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்தனர். இந்தநிலையில் முத்துமாரியப்பன் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் அவரை காணவில்லை. பெற்றோரும், உறவினர்களும் அவரை தேடினர். அப்போது அவர் ஊருக்கு வடக்கே உள்ள வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தூக்கில் தொங்கிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-----------
Related Tags :
Next Story