தூத்துக்குடி மாவட்டத்தில் நாளைமறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் நாளைமறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 19 Oct 2021 5:29 PM IST (Updated: 19 Oct 2021 5:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. இதனால் மேற்கண்ட நேரங்களில் விளாத்திகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட விளாத்திகுளம், துளசிப்பட்டி, கமலாபுரம், கந்தசாமிபுரம், குமாரபுரம், கொர்னயம்பட்டி, ராமச்சந்திராபுரம், அயன்பொம்மையாபுரம், கோட்டநத்தம் மந்திகுளம், கத்தாளம்பட்டி, ஆத்தங்கரை, சிங்கிலிப்பட்டி, வேலிடுபட்டி, பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்,
குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட குளத்தூர், பனையூர், வேப்பலோடை, வைப்பார், சிப்பிக்குளம், புளியங்குளம், பூசனூர், மார்த்தாண்டம்பட்டி, வள்ளிநாயகபுரம், முள்ளூர், கொல்லம்பரும்பு, வடக்கு, தெற்கு கல்மேடு, வீரபாண்டியபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
அதே போன்று சூரங்குடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சூரங்குடி, வேம்பார், பெரியசாமிபுரம், மேல்மாந்தை, இ.வேலாயுதபுரம், விரிசம்பட்டி, வேடப்பட்டி, அரியநாயகிபுரம், தத்தனேரி, பள்ளாகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
----------

Next Story