2 ஆயிரத்து 844 பேர் மீது வழக்கு


2 ஆயிரத்து 844 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Oct 2021 5:49 PM IST (Updated: 19 Oct 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 2ஆயிரத்து 844 பேர் வழக்குகள் பதிவு செய்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காங்கேயம்
காங்கேயத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 2ஆயிரத்து 844 பேர் வழக்குகள் பதிவு செய்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம்  அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வாகன சோதனை
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் காங்கேயம் நகரில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
2 ஆயிரத்து 844 வழக்கு
சோதனையில் மதுக்குடித்துவிட்டும், தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, முகக்கவசம் இல்லாமல் இருப்பது உட்பட பல்வேறு விதிகளை மீறியதாக 2 ஆயிரத்து 844 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை காங்கேயம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
===============


Next Story