ரெயில் நிலையத்தில் தூய்மைப்பணி
ரெயில் நிலையத்தில் தூய்மைப்பணி
திருப்பூர்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் நேற்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருப்பூர் ரெயில் நிலையத்தில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், ரெயில் நிலைய துணை மேலாளர் முண்டே ஆகியோர் தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் திருப்பூர் ரெயில் நிலையத்தில் தூய்மைப்பணியை மேற்கொள்வதோடு, பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களையும் தூய்மைப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் குப்பை இல்லா நகரமாக திருப்பூர் மாறும் என்று தெரிவித்தனர். ரெயில் நிலையம் முன்பு, ரெயில் நிலையத்தின் உள்பகுதியில் தூய்மைப்பணியை மாணவ-மாணவிகள் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story