2 பேர் மீது வழக்கு
விவசாயியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் மீது வழக்கு
தாராபுரம்
தாராபுரம் அருகே உள்ள தேவநல்லுாரை சேர்ந்தவர் மாணிக்கம். விவசாயி. இவருக்கு. பொன்னாபுரம் கிராமம் கள்ளுக்காட்டில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக மாணிக்கத்திற்கும், அதே ஊரை சேர்ந்த வேலுச்சாமி வயது 62, ரகுபதி 45 ஆகியோருக்கும் இடையே தாராபுரம் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளைச்சாமி, ரகுபதி ஆகியோருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் அந்த இடத்தை கையகப்படுத்த பல ஆண்டு காலமாக வெள்ளைச்சாமி முயற்சி செய்து வந்தார். அதற்கு மாணிக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோர்ட்டு மூலமாக இடத்தை மீட்க முயற்சி செய்த போது, இரு தரப்புக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மாணிக்கத்தின் மகன் நாட்டுதுரை அலங்கியம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மாணிக்கத்தை தற்கொலைக்கு தூண்டியதாக வெள்ளைச்சாமி மற்றும் ரகுபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Related Tags :
Next Story