டிரைவர் சிகிச்சை பலனின்றி பலி


டிரைவர் சிகிச்சை பலனின்றி பலி
x
தினத்தந்தி 19 Oct 2021 6:55 PM IST (Updated: 19 Oct 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர்களை தட்டிக்கேட்டபோது கத்தியால் குத்தப்பட்ட டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி 4பேரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்
தாராபுரம் அருகே பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர்களை தட்டிக்கேட்டபோது கத்தியால் குத்தப்பட்ட டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி  4பேரை போலீசார் கைது  செய்தனர்.
இது குறித்து  போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
சாமி தரிசனம்
தாராபுரத்தை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய  மனைவி மீனாட்சி (வயது 40).  இவர் கடந்த 16 -ந் தேதி கடைசி புரட்டாசி சனிக்கிழமை என்பதால் தனது 3 மகன்களை அழைத்துக்கொண்டு அந்த பகுதியில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு  சாமி தரிசனம் செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த பாதையில் அதே பகுதியை சேர்ந்த  சந்துரு 20 மற்றும்  3 சிறுவர்கள்  நடனமாடி கொண்டிருந்தனர். அவர்கள்  மீனாட்சி மீது விழுவது போல் நடனம் ஆடியதால், அவர்கள் 4 பேர்களிடம் மீனாட்சி வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது அதனை பார்த்து கொண்டிருந்த மீனாட்சியின்  உறவினரான டிராக்டர் டிரைவர் சுப்பிரமணி 31 அவர்களை தட்டி கேட்டார். 
கத்திக்குத்து
பிறகு ஒருவழியாக சமாதானமாகி சுப்பிரமணி தனியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே நடனமாடிய  4 பேரும்  சுப்பிரமணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பட்டனர். அவர்கள் 4 பேரும் திடீரென்று  தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுப்பிரமணியை குத்திவிட்டு தப்பி சென்றனர். 
உடனே அருகில் உள்ளவர்கள்  சுப்பிரமணியை மீட்டு  கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுப்பிரமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அலங்கியம் போலீசில் மீனாட்சி புகார் செய்தார். புகாரின் பேரில்  தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரித்து சந்துரு உள்பட 4 பேர்  மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவர்களை  தேடி வந்தனர். 
4 பேர் கைது 
இந்த நிலையில் நேற்று காலையில் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அலங்கியம் போலீசார் கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி சந்துரு உள்பட  4 பேரை கைது செய்தனர்.
---



Next Story