தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல் 2 வாலிபர்கள் போலீசார் கைது


தூத்துக்குடியில்  தொழிலாளிக்கு கொலைமிரட்டல்  2 வாலிபர்கள் போலீசார் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 7:24 PM IST (Updated: 19 Oct 2021 7:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கொலைமிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கி செல்வம் (வயது 23) மற்றும் தூத்துக்குடி சிவந்தாகுளம் நடுத்தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் தீபன்ராஜ் (21) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனடியாக 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இசக்கி செல்வம் மீது 4 வழக்குகளும், தீபன்ராஜ் மீது 3 வழக்குகளும் உள்ளதாக ேபாலீசார் தெரிவித்தனர்.
------------


Next Story