தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரே பள்ளிகளை திறக்கவேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி

வையம்பட்டி, அக்.20-
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பழையகோட்டையில் இந்து மக்கள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் கட்சிக்கொடியினை ஏற்றிவைத்தார். அதன்பின்னர், காஷ்மீரில் கொல்லப்பட்ட இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கொல்லப்படுகிறார்கள். அதனை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். வங்கதேசத்தில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்தபின் பள்ளிக்கூடங்களை 6-ந்் தேதிக்குப்பிறகு திறக்கவேண்டும். தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது. இந்திய, தமிழர் கலாசாரத்திற்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தடைசெய்யவேண்டும். முகநூல் பதிவுக்காக கல்யாணராமன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். கைதின்போது கேள்விகேட்ட பா.ஜ.க.வின் மாநில செயலாளர் சுமதியை அடிக்கப்பாய்ந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்காக இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். பெரியார் குறித்த உண்மைகளை நாங்கள் வெளியிட்டுக்கொண்டே இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story