மாட்டு கொட்டகையில் பதுக்கிய ரூ.6.80 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் பெட்டிக்கடைக்காரர் கைது
மாட்டு கொட்டகையில் ரூ.6.80 லட்சம் புகையிலை பொருட்கள் பதுக்கிய பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
கம்பம்:
கம்பம் மணிக்கட்டி ஆலமரம் சாலை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரியப்பன் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் வசிக்கும் பெட்டிக்கடைக்காரரான ஜாபர் அலி (வயது 39) என்பவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அங்கு 52 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஜாபர் அலியை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story