தூத்துக்குடி பால் வியாபாரி கொலை வழக்கில் மேலும் 4 வாலிபர்கள் போலீசார் கைது
தூத்துக்குடி பால் வியாபாரி கொலை வழக்கில் மேலும் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பால் வியாபாரி கொலை வழக்கில் மேலும் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெட்டிக்கொலை
தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 61). பால் வியாபாரி. இவருடைய மகன் கடந்த 14-ந் தேதி புதிதாக வாங்கிய காரில் கோவிலுக்கு செல்வதற்காக தெருவில் நிறுத்தி உள்ளார். அப்போது எதிர்வீட்டை சேர்ந்த சுப்பையா மகன் பிரகாஷ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை தெருவில் வைத்து கழுவி உள்ளார். அப்போது, தண்ணீர் காரின் மீது பட்டு உள்ளது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்தநிலையில் இரவு ஆவுடையப்பன் சந்திரேசன் நகரில் உள்ள அவருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த சுப்பையா, அவரது சகோதரர் நாராயணன், சுப்பையா மகன்கள் பிரகாஷ், ராம்ஜெயந்த் மற்றும் சிலர் சேர்ந்து ஆவுடையப்பனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து உள்ளனர். இதனை தடுக்க சென்ற அவரது மகன் பெருமாள் (29) என்பவரையும் அரிவாளால் அவர்கள் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த பெருமாள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் சுப்பையா மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மற்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த சண்முகசாமி மகன் மகாராஜா (25), தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் சூர்யா (26), தூத்துக்குடி நிக்கோலஸ் நகரை சேர்ந்த காளியப்பன் மகன் மாரியப்பன் (32) மற்றும் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த ரமேஷ் மகன் பெரியசாமி (20) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
---------
Related Tags :
Next Story