வெவ்வேறு இடங்களில் கஞ்சா, மது விற்ற 6 பேர் கைது


வெவ்வேறு இடங்களில் கஞ்சா, மது விற்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 9:53 PM IST (Updated: 19 Oct 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மது, கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், அமிர்தராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று முள்ளிப்பாடி, லட்சுமணபுரம், வேடப்பட்டி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி மதுவிற்றதாக முள்ளிப்பாடியை சேர்ந்த இன்னாசிமுத்து (வயது 37), லட்சுமணபுரத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (37), வேடப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (60), ஒத்தக்கடையை சேர்ந்த பரமசிவம் (41) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 38 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சாணார்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாரிபட்டியில் மது விற்ற சின்னச்சாமி (40), வி.எஸ்.கே.புதுப்பட்டியில் மதுவிற்ற கார்த்திகேயன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் என்.ஜி.ஓ. காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கிபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 26), ஜீவா (23) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

Next Story