விஷம் வைத்து 45 கோழிகளை கொன்றதாக வழக்கு


விஷம் வைத்து 45 கோழிகளை கொன்றதாக வழக்கு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:58 PM IST (Updated: 19 Oct 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

விஷம் வைத்து 45 கோழிகளை கொன்றதாக வழக்கு செய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
திருப்புல்லாணி அருகே உள்ள சங்கன்வலசையை சேர்ந்தவர் பாக்கியம் மனைவி பிருந்தாவதி (வயது31). இவரின் கோழிகள் மற்றும் உறவினரின் கோழிகள் என 45 கோழிகள்  திடீரென்று இறந்துவிட்டதாம். இதுகுறித்து விசாரித்தபோது அருகில் வசிக்கும் வீட்டினர் பனங் கிழங்கிற்காக பனங்கொட்டைகளை புதைத்துள்ளனர். அதில் பூச்சி வைக்காமல் இருப்பதற்காக மருந்து தெளித்துள்ளனர். இதனால் மண்ணில் இருந்து புழுக்கள் வெளியில் வந்துள்ளது. பூச்சி மருந்துடன் புழுக்கள் வெளியில் வந்ததால் அதனை கோழிகள் தின்றுள்ளன. இதனால் அடுத்தடுத்து கோழிகள் இறந்துள்ளன. இதனை அறிந்த பிருந்தாவதி பக்கத்துவீட்டினர் விஷம் வைத்து கோழிகளை கொன்றுவிட்டதாக திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story