மண் எடுத்து சென்ற லாரியை பொது பொதுமக்கள் சிறைபிடிப்பு
குத்தகை நிலத்திலிருந்து முறைகேடாக மண் எடுத்துச்சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
ஜோலார்பேட்டை
குத்தகை நிலத்திலிருந்து முறைகேடாக மண் எடுத்துச்சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
நாட்டறம்பள்ளி தாலுகா சொரக்கல்நத்தம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கிணற்றுக் கொல்லை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் குத்தகை எடுத்துள்ளார், அங்கிருந்து தினமும் லாரியில் மண் எடுத்து வந்துள்ளார்.
இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயத்தால் நேற்று காலை ஊர் பொதுமக்கள் அப்பகுதியில் மண் எடுத்துச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தினர்.
அனுமதி நடைச்சீட்டை பார்த்தபோது ஆம்பூர் தாலுகா சோலூர் பகுதியில் சாதா கற்கள் மற்றும் கிராவல் மண் எடுப்பதற்கு அனுமதி நடைச் சீட்டு பெற்றுக்கொண்டு முறைகேடாக கிணற்றுக்கொல்லையிலிருந்து மண் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதனால் அந்த லாரியை அவர்கள் சிறைப்பிடித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் பொது மக்களே லாரியை விடுவித்தனர். அதன்பிறகுதான் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் அது குறித்து விசாரணை நடத்தி விட்டு சென்றனர்.
Related Tags :
Next Story