வீட்டின் கதவை உடைத்து 9½ பவுன் நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 9½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 20 Oct 2021 12:00 AM IST (Updated: 20 Oct 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் கதவை உடைத்து 9½ பவுன் நகை திருடி சென்றனர்.

அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே மூக்குடி புதுதெருவை சேர்தவர் பாரதிராஜா (வயது 25). இவர் குடும்பத்தினருடன் கடந்த 15-ந் தேதி மருத்துவ சிகிச்சைகாக புதுக்கோட்டைக்கு சென்று விட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பூரோவில் இருந்த தங்க செயின்,  நெக்லஸ், தங்க தோடு உள்பட மொத்தம் 9½ பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story