உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 7 ஆம்புலன்சுகள் பறிமுதல்
கரூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 7 ஆம்புலன்சுகளை பறிமுதல் செய்யப்பட்டன
கரூர்
கரூரில், சாலைகளில் அதிவேகமாக ஆம்புலன்சுகள் இயக்கப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆம்புலன்ஸ்கள் அதிவேகமாகவும், உரிமம் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் கரூரில் இயக்கப்படும் ஆம்புலன்சுகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டது.
7 ஆம்புலன்சுகள் பறிமுதல்
அதனைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களை சோதனை செய்து பறிமுதல் செய்தனர். கடந்த 1 மாதமாக செய்யப்பட்ட சோதனையில் இதுவரை 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.73 ஆயிரத்து 500-ம், பசுமை வரியாக ரூ.6 ஆயிரமும் வசூல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story