நாய்கள் கடித்ததில் புள்ளி மான் சாவு


நாய்கள் கடித்ததில் புள்ளி மான் சாவு
x
தினத்தந்தி 20 Oct 2021 12:08 AM IST (Updated: 20 Oct 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

நாய்கள் கடித்ததில் புள்ளி மான் பரிதாபமாக செத்தது.

கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள திருப்புனவாசல் செங்காணம் கிராமத்தில் புள்ளிமான் ஒன்றை நாய்கள் கடித்துக் கொண்டிருந்தன. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நாய்களை விரட்டி விட்டு அந்த புள்ளி மானை மீட்டு முதலுதவி செய்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், வனத்துறையினர் அங்கு வருவதற்குள் மான் பரிதாபமாக செத்தது. 

Next Story