தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி மடிக்கணினி, ரூ.15 ஆயிரம் பறிப்பு


தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி மடிக்கணினி, ரூ.15 ஆயிரம் பறிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2021 12:46 AM IST (Updated: 20 Oct 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன உரிமையாளரை தாக்கி மடிக்கணினி, ரூ.15 ஆயிரம் பறிப்பு

திருச்சி, அக்.20-
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் ரஞ்சிதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 31). இவர் தில்லைநகர் 9-வது குறுக்குசாலையில் கணினி சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு முதலியார்சத்திரம் பெல்ஸ்கிரவுண்டு தபால் குடோன் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பிராங்கிளினிடம் சுப்பிரமணியபுரம் பகுதிக்கு செல்வதற்கு வழிகேட்டனர். அவரும் அவர்களிடம் வழி சொல்லிவிட்டு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பெல்ஸ்கிரவுண்டு பழைய ரெயில்வே குடியிருப்பு அருகே அந்த 3 பேரும் திடீரென பிராங்கிளினை வழிமறித்தனர். பின்னர் அவரை தாக்கி அவரிடம் இருந்த மடிக்கணினி மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறித்தனர். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து பிராங்கிளின் பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பாலக்கரை போலீசார் மடிக்கணினி மற்றும் பணம் பறித்த மர்ம நபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story