புதிய ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்


புதிய ரேஷன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 20 Oct 2021 1:06 AM IST (Updated: 20 Oct 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே புதிய ரேஷன் கடையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.

காரியாபட்டி,
காரியாபட்டி அருகே புதிய ரேஷன் கடையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். 
ரேஷன் கடை 
காரியாபட்டி ஒன்றியம் கல்குறிச்சியில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை மற்றும் வடகரை, அச்சங்குளம் ஆகிய கிராமங்களில் சமுதாய கூடத்தையும் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். 
இந்த நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி முன்னிலை வகித்தார். இதில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் செந்தில்குமார்,  சார் பதிவாளர் கார்த்திக், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
பஸ்கள் இயக்கம் 
திருச்சுழி பூமிநாதர் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விருதுநகர் மண்டலத்தின் மூலம் நீட்டிப்பு செய்யப்பட்ட வழித்தடத்திற்கான 4 பஸ்களை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையிலும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி முன்னிலையிலும், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 


Next Story