நெல்லையில் சுகாதார அதிகாரிக்கு டெங்கு காய்ச்சல்
நெல்லையில் சுகாதார அதிகாரிக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. இருந்தபோதிலும் சுகாதார துறையினர் 3-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லையில் சுகாதார அதிகாரி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதையொட்டி அவர் வசிக்கும் பகுதியில் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு, கொசு ஒழிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story