கறி வெட்டும் கத்தியால் பெண்ணை கொன்ற வாலிபர்


கறி வெட்டும் கத்தியால் பெண்ணை கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 20 Oct 2021 1:18 AM IST (Updated: 20 Oct 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே கறி வெட்டும் கத்தியால் பெண்ணை வாலிபர் கொலை செய்தார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே கறி வெட்டும் கத்தியால் பெண்ணை வாலிபர் கொலை செய்தார். 
தகராறு
விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரை சேர்ந்தவர் ஜெயவீரன் (வயது 65). 
இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் விஜயகுமார் (24). இவருடைய மனைவி செந்திலா.
 ஜெயவீரனின் மகன் ஜெகதீசனிடம் செல்போனை வாங்கி தனது பெற்றோரிடம் செந்திலா அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை தவறாக நினைத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஜெகதீசனை கத்தியால் குத்தியதாக விஜயகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளி வந்திருந்தார்.
இந்தநிலையில் விஜயகுமாரின் மனைவி செந்திலா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் விஜயகுமாருக்கும், ஜெயவீரன் குடும்பத்தினருக்கும் மீண்டும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
 கொலை
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் திடீரென மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்ட நிலையில், மாடியில் இருந்து அவருடைய கணவர் ஜெயவீரன் பதறியடுத்து எழுந்து வந்து பார்த்தார். அப்போது அங்கு விஜயகுமார், மாரியம்மாளை கறிவெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் விஜயகுமார் கிழக்கு வாசல் வழியாக தப்பி ஓடி விட்டதாகவும் தெரியவருகிறது.
இதற்கிடையே மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி ஜெயவீரன், வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதனைத்தொடர்ந்து போலீசார், விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அதிகாலையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் கோவிந்தநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story