வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2021 1:39 AM IST (Updated: 20 Oct 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் சாலைகரைக்கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது மகனை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதற்காக ஜெயங்கொண்டத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்த நாகல்குழியை சேர்ந்த பரமசிவம் மற்றும் துறையூரை சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது அவர்கள், அந்தோணிசாமி மகனுக்கு பிரான்ஸ் நாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு போலி விசா, விமான டிக்கெட் கொடுத்துவிட்டு, தலைமறைவாகிவிட்டதாக அந்தோணிசாமி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லாவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் பிரகாஷ் வெளிநாடு தப்பிச்சென்ற நிலையில், அவர் மீண்டும் ஊருக்கு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பரமசிவம் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பரமசிவம் ஜெயங்கொண்டத்தில் விசாலாட்சி நகரில் வாடகை வீட்டில் தலைமறைவாக இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா வழிகாட்டுதலின்படி நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கியசாமி தலைமையிலான போலீசார் பரமசிவத்தை கைது செய்து, ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Next Story