மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மூதாட்டி பலி + "||" + Grandmother kills Corona

கொரோனாவுக்கு மூதாட்டி பலி

கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 28 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 739 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 2 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 2 பேர், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களில் தலா ஒருவர் என மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 242 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெரம்பலூர் துறைமங்கலத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி உயிரிழந்தார். இதனால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 243 ஆக உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது மொத்தம் 46 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 27 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 19 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒருவருக்கு கொரோனா
புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. ஒருவருக்கு கொரோனா
புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஒமைக்ரான் பாதித்த நபருடன் தொடர்புடைய 5 நபருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த நபருடன் தொடர்புடைய 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனாவுக்கு முதியவர் பலி
கொரோனாவுக்கு முதியவர் பரிதாபமாக இறந்தார்.
5. தமிழகத்தில் மேலும் 720 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.