பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகள் திருட்டு


பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 20 Oct 2021 1:39 AM IST (Updated: 20 Oct 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடியை சேர்ந்தவர் அழகுவேல்(வயது 35). இவருக்கு சொந்தமான ஆடுகளை அவரது பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் பட்டியில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அழகுவேல் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story