மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 20 Oct 2021 1:39 AM IST (Updated: 20 Oct 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 26). இவர் மழவராயநல்லூர் பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சில வருடங்களாக தலைமறைவாக இருந்த அவரை, கடந்த மாதம் விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுமதி கைது செய்து பெரம்பலூர் சிறையில் அடைத்தார். மேலும் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டதால் ரமேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதை ஏற்று ரமேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து பெரம்பலூர் சிறையில் இருந்த ரமேஷிடம் கலெக்டரின் உத்தரவை காண்பித்து, அவரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Next Story