தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
படகு சவாரி வேண்டும்
நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. இதன் அடிவாரத்தில் கமலாலய குளம் உள்ளது. இந்த குளத்தில் படகு சவாரி நடந்து வந்தது. இதில் மாலை நேரத்தில் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் ஆர்வமுடன் சவாரி செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு படகுசவாரி நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் உள்ள நிலையில், தொடர் மழையால் கமலாலய குளத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே மீண்டும் படகு சவாரியை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுமுகம், நாமக்கல்.
=====
ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா?
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், புட்டிரெட்டிப்பட்டி வழியாக ரெயில்வே பாதை செல்கிறது. இந்த பாதையை கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கடந்து தான் செல்ல வேண்டும். இந்த ரெயில்வே பாதையின் வழியாக பயணிகள் ெரயில்கள் மற்றும் சரக்கு ெரயில்கள் அடிக்கடி சென்று வருகின்றன. அப்போது ரெயில்வே கேட் மூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் புட்டிரெட்டிப்பட்டி ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
ஊர்பொதுமக்கள், புட்டிரெட்டிபட்டி, தர்மபுரி
---=====
ஆபத்தான தொகுப்பு வீடுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் குன்னத்தூர் கிராமத்தில் அருந்ததியர் காலனி உள்ளது. இங்குள்ள தொகுப்பு வீடுகளில் 6-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்து எந்த நேரமும் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. விபத்து ஏதேனும் நடந்து உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்னர் ஆபத்தான இந்த தொகுப்பு வீடுகளை சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், குன்னத்தூர், கிருஷ்ணகிரி.
======
சாலையில் ேபாக்குவரத்து சிக்னல்
சேலம் சன்னியாசிகுண்டு பைபாஸ் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு சாலையில் போக்குவரத்து சிக்னல் இல்லாத காரணததால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. இதனால் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இங்கு சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், சன்னியாசிகுண்டு, சேலம்.
=======
குண்டும், குழியுமான சாலை
சேலம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம் அ.தாழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கடையில் இருந்து கன்னந்தேரி செல்லும் சாலை மற்றும் மூலக்கடை முதல் மாங்குட்டபட்டி வரை செல்லும் சாலை தோண்டப்பட்டு 6 மாதங்களாகிறது. சாலையை சீரமைக்க ஜல்லி கற்களும் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளன. ஆனால் குண்டும், குழியுமான இந்த சாலையில் தற்போது மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. சாலையை சீரமைக்க அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், அ.தாழையூர் , சேலம்.
=====
வேகத்தடை தேவை
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் சந்திரப்பிள்ளைவலசு பள்ளத்தாதனூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த வழியாக வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இது குறித்து நாங்கள் பல முறை மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கை இல்லை. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.பழனிமுத்து, பள்ளத்தாதனூர், வாழப்பாடி,
=====
சாலையில் தேங்கும் கழிவுநீர்
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணநகர் 10-வது கிராஸ் பகுதியில் ஒரு மாதமாக சாக்கடை கழிவுநீர் சாலையில் சென்று வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது மழைகாலம் தொடங்கி விட்டதால் மழைநீரும், சாக்கடை நீரும் கலந்து சாைலயில் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் சாலையில் தேங்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள். அம்மாபேட்டை, கிருஷ்ணநகர், சேலம்.
====
Related Tags :
Next Story