இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2021 3:28 AM IST (Updated: 20 Oct 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர்:
கடையநல்லூரில் நகர இந்து முன்னணி சார்பில், கிருஷ்ணாபுரம் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் சிலைகளை உடைத்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கடையநல்லூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் தமிழரசு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் கண்டன உரையாற்றினார். மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றாலநாதன், சாக்ரடீஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, பா.ஜனதா மாவட்ட தலைவர் ராமராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, மாவட்ட பொருளாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story