நன்மங்கலத்தில் தண்ணீர் கேன் வியாபாரி கழுத்து அறுத்து கொலை
நன்மங்கலத்தில் தண்ணீர் கேன் வியாபாரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நன்மங்கலம் அருள் முருகன் நந்தவனம் நகரையொட்டி உள்ள வயல்வெளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு, மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங்க்-டி ரூபன், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குரோம்பேட்டை ராதா நகரை சோ்ந்த தண்ணீா் கேன் போடும் வேலை செய்த விக்னேஸ்வரன் (21) என்பதும், இவர், கமலக்கண்ணன் உள்பட 3 பேருடன் சிட்லப்பாக்கத்தில் இருந்து ஆட்டோவில் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கமலக்கண்ணன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், இக்கொலை தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story