பிரபல தாதா சுரேஷ் புஜாரி பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது
பிரபல தாதா சுரேஷ் புஜாரி பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
பிரபல தாதா சுரேஷ் புஜாரி பிலிப்பைன்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுரேஷ் புஜாரி கைது
பிரபல தாதா சுரேஷ் புஜாரி மீது மும்பை, தானேயில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக தானே மட்டும் மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக சுமார் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தானே போலீசார் சுரேஷ் புஜாரியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருந்தனர். இதேபோல சர்வதேச போலீசாரும் சுரேஷ் புஜாரிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது.
இந்தநிலையில் சுரேஷ் புஜாரி பிலிப்பைன்ஸ் நாட்டில் பிடிபட்டுள்ளதாக அந்த நாட்டு பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. அந்த பத்திரிகையில், ‘‘குடியுரிமை ஆணையம் சுரேஷ் பசப்பா புஜாரியை (வயது48) பரனாக்யு நகரில் கைது செய்து உள்ளனர். அவர் நாடு கடத்தப்படலாம். அவர் சட்டவிரோதமாக தங்கி இருந்து உள்ளார்’’ என கூறப்பட்டுள்ளது.
ரவி புஜாரி உறவினர்
இதையடுத்து சுரேஷ் புஜாரியை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான பணிகளை தானே போலீசார் தொடங்கி உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அதே நேரத்தில் சுரேஷ் புஜாரி கைது செய்யப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் குறித்து மும்பை போலீசார் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
தாதா சுரேஷ் புஜாரி, மற்றொரு தாதாவான ரவி புஜாரியின் உறவினர் ஆவார். 2007-ம் ஆண்டு 2 பேரும் பிரிந்தனர். இதையடுத்து சுரேஷ் புஜாரி வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இதேபோல வெளிநாடு தப்பிச்சென்ற ரவி புஜாரி 2 ஆண்டுகளுக்கு முன் செனகல் நாட்டில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story