டிரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு
குண்டடம் பகுதியில் மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த டிரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டடம்
குண்டடம் பகுதியில் மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்த டிரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்காச்சோளம் சாகுபடி
குண்டடம், மேட்டுக்கடை, எரகாம்பட்டி, மானூர்பாளையம், பெல்லம்பட்டி, அங்கித்தொழுவு, பொன்னாபுரம், சத்திரம், உடுமலை, குடிமங்கலம், பெதப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். மழைக்காலத்தில் இடுபொருட்செலவு அதிகமில்லாத பயிர் என்பதாக இருப்பதாலும், அடுத்த ஒரு வருடத்திற்கான கறவை மாடுகளுக்கு தீவனமாக மக்காச்சோள தட்டு பயன்படுவதாலும் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோழிப்பண்ணைகள் அதிகரித்து வருவதால் கோழித் தீவனமாக மக்காச்சோளம் உள்ளதால் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும் ஆடு, மாடுகளுக்கான கலப்பு தீவனத்திலும் பெரும்பகுதி மக்காச்சோளம் பயன்படுத்தப்படுகிறது.
மருந்து தெளிப்பு
இந்த நிலையில் நடப்பு சீசனில் பி.ஏ.பி. தண்ணீர் மற்றும் மழையை பயன்படுத்தி விதைப்பு செய்யப்பட்ட மக்காச்சோள பயிர் தற்போது ஒரு அடி உயரத்திற்கு மேல் வளர்ந்த நிலையில் படைப்புழுக்கள் தாக்குதலும் தொடங்கிவிட்டது. வழக்கமாக பவர் ஸ்பிரேயர் மூலம் பூச்சி மருந்து தெளித்தால் பயிரின் குருத்துக்களில் பதுங்கியிருக்கும் புழுக்கள் மேல் மருந்து படாததால் அவைகள் தப்பி மீண்டும் பயிரை தாக்குகின்றன. இந்த நிலையில் டிரோன்களை கொண்டு மருந்து தெளிக்கும்போது எளிதாக குருத்தில் மருந்து செல்லும் என்பதால் இந்தப் பகுதி விவசாயிகள் டிரோன்களைக் கொண்டு மருந்து தெளிக்கின்றனர்.
இதுபற்றி குண்டடம் அடுத்துள்ள சடையபாளையத்தை சேர்ந்த மக்காச்சோள விவசாயி குணசேகரன் கூறும்போது, பவர் ஸ்பிரேயருக்கு பதிலாக டி்ரோன்களை இந்த வருடம்தான் பயன்படுத்தியுள்ளோம். பவர் ஸ்பிரேயரில் ஒரு ஏக்கருக்கு சுமார் 12 லிட்டர் கொண்ட 10 டேங்க் மருந்து தெளிப்போம். ஆனால் டிரோனில் ஏக்கருக்கு 11லிட்டர் கொண்ட ஒரே ஒரு டேங்க் மருந்து மட்டுமே போதுமானதாக உள்ளது. ஆனால் பூச்சி மருந்து மட்டும் கூடுதலாக பயன்படுத்த வேண்டும். விரைவானதாகவும், எளிதாகவும் உள்ளது.
1டேங்க் மருந்து தெளிக்க வாடகையாக ரூ.500 வசூலிக்கின்றனர். 5ஏக்கர் பரப்பில் மருந்து தெளிக்க ரூ.2ஆயிரத்து 500செலவாகிறது. இதன் முழுமையாக எப்படி பலனளிக்கிறது என்பது போகப் போகத்தான் தெரியவரும் என்றார்.
-
Related Tags :
Next Story