ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர்
வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. கவுரவ தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர்கள் லோகேஷ்குமார், சங்கர், சட்ட ஆலோசகர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவதாஸ் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தனியார் நகர பஸ் உரிமையாளர்களுக்கு சாதமாக வேலுர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை செயல்படக்கூடாது. வேலூர் மாநகரில் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் என்று பொய்காரணம் கூறக்கூடாது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு தெரியாமல் ஆட்டோக்களின் பதிவு எண்ணை குறித்து ஆன்லைனில் வழக்குப்பதிவு செய்வதை கைவிட வேண்டும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும், போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஆட்டோகளுக்கு பெர்மிட், இன்சூரன்ஸ் போன்ற நடவடிக்கைகளை வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்கள்.
Related Tags :
Next Story