ஆலத்தூர் கிராமத்தில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


ஆலத்தூர் கிராமத்தில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 20 Oct 2021 5:24 PM IST (Updated: 20 Oct 2021 5:24 PM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இருந்து காஞ்சி மற்றும் புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆலத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான தெருக்கள் குண்டும் குழியுமாகவும், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படாமலும் உள்ளதால் மழை நீர்தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே உள்ளதால் சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் ஆலத்தூர் கிராம மக்கள் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். அது குறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் புதுப்பாளையம் ஒன்றியகுழுத்தலைவர் பொன்னி சுந்தரபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆலத்தூர் கிராமத்தில் பழுதான சாலைகள் விரைந்து சீரமைக்கப்படும் என புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னி சுந்தரபாண்டியன் உறுதி அளித்ததார். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story