ஆரணியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது
ஆரணி
ஆரணி பையூர் 4 முனை சந்திப்பு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ரூபன்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், அல்லிராணி (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் தருமன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பையூர் காலனி பகுதியைச் சேர்ந்த முனுசாமியின் மகன் ராகுல் (வயது 24), சேவூர் காலனி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் அபினேஷ் (22) ஆகியோர் மேற்கண்ட 4 முனை சந்திப்பு வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, கஞ்சா விற்பதாக கூறினர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story