ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 20 Oct 2021 8:05 PM IST (Updated: 20 Oct 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

கூடலூர்

சிவன் கோவில்களில் அனைத்து பவுர்ணமி நாளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள், மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேக நடைபெற்றது. 

கூடலூர் நந்தட்டி சிவன் கோவில், முக்கூடல் லிங்கேஸ்வரர், நடுவட்டம் சிவன் கோவில் உள்பட பல கோவில்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் கூடலூர் அருகே நம்பாலக்கோட்டை சிவன்மலையில் காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகளும், மதியம் 1 மணிக்கு சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.

 கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் மாலை 5 மணிக்கு சிவன் மலையில் சிவலிங்கம், நந்தீஸ்வரருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உலக மக்களின் நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. 

Next Story