கூடலூர்-மலப்புரம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


கூடலூர்-மலப்புரம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2021 8:06 PM IST (Updated: 20 Oct 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர்-மலப்புரம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்

கூடலூர், பந்தலூர் தாலுகாகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கூடலூரில் இருந்து மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சாலையில் கீழ் நாடுகாணி என்ற இடத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு மரம் ஒன்று சரிந்து விழுந்தது.

இதனால் கூடலூர்- மலப்புரம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

ஆனால் அதற்கு முன்பாக வாகன டிரைவர்கள் ஒன்று திரண்டு சாலையில் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அரை மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

Next Story