தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் தனியாக செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. மேலும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி சாலையின் குறுக்காக ஓடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். தெருநாய்களிடம் இருந்து மக்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புகழீழன், பழனி.
தெருவில் ஓடும் கழிவுநீர்
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் நடுத்தெருவில் செல்கிறது. மழை காலத்தில் தெருவில் மக்கள் நடமாட முடியவில்லை. சுகாதாரக்கேடு உருவாகுவதை தடுக்க சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.
-சரவணபுதியவன், சின்னமனூர்.
கொசு மருந்து அடிப்பார்களா?
பழனியை அடுத்த திருநகரில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. தற்போது மழை காலமாக இருப்பதால் தொற்றுநோய்கள் பரவி விடும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தை காக்கும் வகையில் கொசுக்களை அழிக்க மருந்து அடிக்க வேண்டும்.
-ஸ்ரீநிதி, திருநகர்.
பயன்படாத குடிநீர் தொட்டி
திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடியை அடுத்த சுப்பையாபிள்ளைநகரில் ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லை. பொதுமக்கள் நலன்கருதி குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா?
-சதீஷ்குமார், சீலப்பாடி.
சேதமடைந்த சாலை
திண்டுக்கல் நாகல்நகர் சிறுமலை செட் பகுதி முதல் சந்தைரோடு வரை உள்ள இணைப்பு சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. அந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து விடுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கண்ணன், திண்டுக்கல்.
Related Tags :
Next Story