திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் தீத்தான், புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். புதிதாக நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story