கல்லூரி மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி புகைப்படங்களை குறும்படங்களாக பதிவேற்றம் செய்ய வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் வேண்டுகோள்
கல்லூரி மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி புகைப்படங்களை குறும்படங்களாக பதிவேற்றம் செய்ய வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் வேண்டுகோள்
நாமக்கல்:
கல்லூரி மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை குறும்படங்களாக தயாரித்து, கல்லூரி இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறப்பு தடுப்பூசி முகாம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கல்லுாரி நிர்வாகத்தினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ளும் வகையில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாவட்டம் தோறும் நடத்த உத்தரவிட்டு உள்ளார். தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குறும்படங்கள்
வருகிற 23-ந் தேதி 6-ம் கட்டமாக மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம நடக்கிறது. கல்லுாரி மாணவ, மாணவிகள் இத்தடுப்பூசி முகாம் குறித்து தங்கள் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும் தங்கள் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அவர்களையும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
18 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்டு, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை குறும்படங்களாக தயாரித்து, தங்களது கல்லுாரி இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் மூலம் அனைத்து மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் சுகாதாரப்பணிகள் உதவி இயக்குனர் நக்கீரன், பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார் பச்சைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story